
பாவனாவை படம் பிடித்த போன் மாயமானதில் சதி..!
பிரபல மலையாள நடிகை பாவனா கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோ காட்சி அடங்கியுள்ள செல்போனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை கடத்தியவுடன் அவரின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில் யாருக்கோ போன் செய்து தகவல் கொடுத்தார்.
அந்த நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை
நடிகையை மானபங்கம் செய்ததை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த கொடூர செயலை வீடியோ எடுத்தது வெள்ளை நிற செல் போனாம். அந்த வெள்ளை நிற செல்போனை சுனில் கொச்சியில் உள்ள ஏரி ஒன்றில் வீசிவிட்டார் என்று சுனில் கூறியிருக்கிறார். .
இந்த வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனை வீசிய இடத்தை சுனில் போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.
கொச்சி ஏரியில் செல்போனை தேடும் பணி நடந்து வருகிறது. அந்த செல்போன் கிடைத்தால் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் நிஜத்தில் போனை ஏரியில் தான் வீசினாரா இல்லை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டாரா என்பது குறித்தும் போலீஸ் விசாரித்து வருகிறது.
அந்த செல்போன் சிக்கினால் அதில் வேறு நிறைய வில்லங்கங்கள் இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.
