தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, 2001-ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மழை என்ற படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்று பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார் ஸ்ரேயா. பிறகு கதாநாயகியில் இருந்து, குணசித்ர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்திரி என்ற படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தலில் நடித்தார், அந்த படத்தை தயாரித்ததும் இவர் தான். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயாவின் திருமண செய்திகள் அவ்வப்போது வதந்திகளாக வெளியாகி தான் வந்தது.
ஆனாலும் ரஷியாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.மிகப்பெரும் கோடீசுவரரான இவர் சிறந்த டென்னீஸ் விளையாட்டு வீரர் ஆவார். உதய்ப்பூரில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. பின்னர் தன் காதலரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர் மார்ச் மாதம் திருமணம் செய்வேன் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென்று ஸ்ரேயா – ஆன்டிரே கோச்சேவ் திருமணம் மும்பையில் கடந்த 12ந்தேதி ரகசியமாக நடந்தது. இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி நடந்தது.
இந்நிலையில் இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்தாமல் ரகசியமாக ஏன் நடத்தினார்கள் என்ற காரணம் தற்போது கசிந்துள்ளது. அதன்படி ஸ்ரேயாவின் அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையாம். இதனால் பிரச்சினை ஏற்பட்டு திருமணம் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், முன்னதாகவே ஸ்ரேயா- ஆண்ட்ரே கோசிவ்விற்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது என்று இந்தி பட உலகில் பரவலாக பேசப்படுகிறது.
