தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடரும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

திரையரங்குளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் புதிய படங்கள் ஏதும் வெளியாகமால் இருந்து வருகிறது.வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால் பேச்சு வார்த்தை சரியான முறையில் நடக்கிறது. இன்னு 2-3 நாட்களில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் பேசுகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடரும். ஆன்லைன் கட்டணம் தொடர்பாக அரசிடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்லவும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. புரொஜக்டர் வைத்து திரையிடப்படுவது திரையரங்கு உரிமையாளர்களின் பொறுப்பு. ஆன்லைன் புக்கிங்கால் தயாரிப்பாளர்களுக்கு எந்த பயனும் இல்லை. திரைத்துறையின் அனைத்து மட்டங்களும் சரி செய்யப்பட வேண்டும் என்றார்
350 Views
