வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

நடிகையர் திலகம் படத்தில் ’மதுரவாணி’யாக சமந்தா!

நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் குறித்த தகவலுடன் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாராகிவருகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துவருகின்றனர். பத்திரிகை நிருபராக நடிக்கும் சமந்தா, தனக்கான படப்பிடிப்புக் காட்சிகள் முடிவடைந்துவிட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மகாநதியில் எனக்கான படப்பிடிப்புக் காட்சிகளில் நடித்துமுடித்துவிட்டேன். சாவித்திரியின் வாழ்க்கை சம்பந்தபட்ட படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி நாக் அஸ்வின் சார்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தற்போது இந்தப் படத்தில் சமந்தா மதுரவாணி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் பத்திரிகையாளராக நடித்திருக்கிறாராம்

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மே 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

322 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன