ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தல ரசிகர்!

கடந்த 4-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 41 பதக்கங்களை வென்று முதலிடத்திலும், 23 பதக்கங்களை பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா, இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்களை பதிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது இந்தியா ஒரு தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் ஆடவர் 77கிலோ பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு மூன்றாவது தங்கத்தை சதீஸ்குமார் பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

தமிழக வீரரின் இந்த சாதனைக்கு நமது இந்தியாவின் குடியரசு தலைவர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “பளுதூக்கும் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகின்றனர். ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் என்பவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சதீஷ் குமாரின் சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சதீஷ் குமாருக்கு அவர் வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். தமிழக அரசு சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

 வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் ரயில்வேயில் பணிபுரிந்துவருகிறார். இவர் அதி தீவிர அஜீத் ரசிகர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அஜீத் ரசிகர்கள் சதீஷ் அஜீத் ரசிகர் என்பதை ட்விட்டரில்ட்ரெண்டாக்கி வருகின்றனர். தல அஜீத் சதீஷை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார்என்ற தகவலும் ட்விட்டரில் உலா வருவது குறிப்பிடத்தக்கது. 

291 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன