
என்னை கற்பழிக்கப் போவதாக ட்விட்டரில் பலரும் மிரட்டுகிறார்கள். எனவே அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.
இது தொடர்பாக, மாற்றம் கோரும் இணையதளமான change.com-ல் ஒரு வேண்டுகோளை வைத்து, மக்களிடம் ஆதரவு கோரியுள்ளார்.

சமூக வலைத் தளமான ட்விட்டரில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நடிகர் நடிகைகளின் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் வலம் வருகின்றன. ஆரம்பத்தில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இவை வெளியாகின. பின்னர் அந்தக் கணக்கு முடக்கப்பட்டதும், சுசிலீக்ஸ் என்ற ஹேஷ்டேகுடன் வெவ்வேறு பக்கங்களில் வெளியாகி வருகின்றன.
சின்மயி – அனிருத் படங்கள், வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் ஒரு சுசித்ரா பக்கத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும் சின்மயி பற்றிய மேலும் சில அந்தரங்க தகவல்களும் அந்தப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் தன்னை கற்பழிக்கப் போவதாகவும், முகத்தில் ஆசிட் அடிக்கப் போவதாகவும் மிரட்டல் வருவதாக புகார் கூறியுள்ளார் சின்மயி.
இந்த மாதிரி மிரட்டல் விடும் நபர்களின் கணக்குகள் அனைத்தையும் ட்விட்டர் முடக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து, ஒரு ஆன்லைன் பெட்டிஷனை இணைய வாசிகளிடம் வைத்துள்ளார் சின்மயி.

பாடகி சுசித்ரா பெயரில் வெளியான டிவிட்டர் பக்கத்தில் பாடகி சின்மயி 4 முறை கருகலைப்பு செய்ததாகவும், அதற்கான மருத்துவ ஆதாரங்களை வெளியிடட்டுமா என்று கேள்வி எழுப்பி ஒரு பதிவு வெளியானது. இதற்கு வாய்ப்புக்காக எதையும் செய்யும் ஆள் இல்லை நான் எதையும் சந்திப்பேன் என்று சின்மயியும் பதில் டிவிட் போட்டிருந்தார். ஆளாளுக்கு பதிலுக்கு பதில் பதிவு போட்ட நிலையில் கூவத்தை விடவும் மிகவும் நாற்றமெடுக்கும் பல பஞ்சாயத்துக்கள் வெளியான சூழலில் என் டிவிட் கணக்கு முடக்கப்பட்டது. யாரோ இதை செய்கிறார்கள் என்று கைவிரித்தார் சுசித்ரா.

எது எப்படியோ தமிழ் சினிமாவின் இன்னொரு முகம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இனியாவது சினிமாவில் எதற்காக வருகிறார்களோ அதை மட்டும் கவனித்தால் இதுபோன்ற அசிங்கங்களை தவிர்க்கலாம்…!
