
அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கியிருந்த படம் குற்றம்23. மருத்துவ துறை தொடர்பான த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்கள் ஆதரவோடு நிஜ வெற்றி பெற்ற படம் என்று வினியோகஸ்தர்கள் தொடங்கி படம தயாரித்தவர்கள், தியேட்டர் அதிபர்கள் வரை சொல்லும் படம் குற்றம் 23. இந்த படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.
சின்ன டெக்னீஷியன் தொடங்கி அனைவரையும் மேடையேற்றி பேச வைத்தார்கள். வெற்றி விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விஜயகுமாருக்கு ஆளுயர மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் கேக் வெட்டி நிறைவு செய்தார்கள்.

416 Views
