
விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு தாயம் போன்ற படங்களை எடுக்க முயற்சிப்பவர்கள் தயவு செய்து ஹாலிவுட் பக்கம் போய்விடுங்கள். தமிழில் உங்கள் கற்பனை திறனுக்கு வேலையே இல்லை…
கதை: ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வேலைக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், நாயகன், நாயகி உள்பட 8 பேர் வருகிறார்கள். அவர்களை ஜெயக்குமார் ஒரு அறையில் அடைத்து வைக்கிறார். அந்த அறைக்குள் அவர்கள் 1 மணி நேரம் இருக்க வேண்டும் என்றும், 1 மணி நேரத்திற்கு பிறகு யார் உயிரோடு இருக்கிறார்களோ, அவர்கள்தான் இந்த கம்பெனிக்கு தலைமை அதிகாரி என்றும் கூறிவிட்டு, அறைக் கதவை அடைத்துவிட்டு செல்கிறார்.
அந்த அறைக்குள் சென்றவுடன் 8 பேருக்கும் தான் யார் என்பதும், தன்னுடைய பின்புலம் என்னவென்பதும் மறந்துவிடுகிறது. ஆனால், நம்மில் யாரோ ஒருவர் மட்டும்தான் வெளியே செல்ல முடியும் என்பதுமட்டும்தான் தெரிகிறது. அப்படியிருக்கையில், அந்த அறைக்குள் இருந்து யார் உயிரோடு வெளியே வந்தார். அந்த அறைக்குள் அவர்களுக்குள் நடந்தது என்ன? என்பதை சஸ்பென்ஸோடு சொல்லும் கதையே தாயம்.

8 பேரை கொன்றால்தான் அந்த வேலை கிடைக்குமா? அப்படியென்ன அந்த பதவிக்கு மவுசு இருக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு கிளைமாக்சில் பதில் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும், கிளைமாக்சில் 7 பேரை கொன்றுவிட்டு, ஒருவர் வெளியே வருவது போலவும் காட்டியிருக்கிறார்கள்.
ஹாலிவுட் படங்களில் இதுபோன்று வெளிவந்து பல வெற்றி பெற்றுள்ளன. அப்படி ஒரு படத்தை தமிழுக்கு தர முயற்சித்து தாயம் விளையாட்டில் தோற்றுப் போயிருக்கிறார் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி. ஒரு அறையில் கதை நடந்தாலும் அதில் ரசனை துளியும் இல்லாமல் மன நிலை பாத்திக்கப்பட்டவர்கள் போல சிரிப்பதை மட்டும் அடிக்கடி காட்டி வெறுப்பை சம்பாதிக்கிறார் இயக்குனர். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டுவதுபோல், அவர்களுக்கென்று தனித்தனி குணாதிசயங்கள் கொடுத்திருந்தாலும் அதில் புதுசு ஒன்றும் இல்லை. கடைசியில், அவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைதான் என்று சொல்லி முடித்திருக்கிறார். சுவாரஸ்யம் என்பது துளியும் இல்லாததால் படத்தை பார்க்கும் நமக்கும் தலைவலி வருவது தான் மிச்சம்.
தாயம் பார்க்கிறவர்களுக்கு கட்டயம் ஏற்படுத்தும் காயம்..!
