திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: Udhayanidhi stalin

இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்!

இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்! நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார். இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது....