சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

நடிகர்கள்

‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் – விஜய் சேதுபதி கூட்டணி

‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் – விஜய் சேதுபதி கூட்டணி

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் - விஜய் சேதுபதி கூட்டணி விஜய் சேதுபதியின் ‘தெருகூத்து கலைஞன்’ காலண்டர் வெளியீடு தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கிறது. நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான முனைவர் எல். ராமச்சந்திரன் பிரத்யேக முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். தெருக்கூத்து க...
சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்! சல்மான் கான் நடிப்பில் வெளியான டைகர் படத்தின் பாகம் ஒன்று மற்றும் 2 சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டைகர் படத்தின் 3ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைப் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சல்மான் கான் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பது, ரசிகர்கள் மத்தியில் டைகர் 3 பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தை தவிர பதான் என்ற படத்திலும், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை!

சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை! எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் சுல்தான். அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருந்த இப்படம், ஏப்ரல் 2-ந் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது. தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் சுல்தான்...’ என்ற பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்....
விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..!

விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்று பதிவு செய்து வருகிறார்கள்.  ...
பார்த்திபனுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

பார்த்திபனுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பார்த்திபனுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்! ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் விசாவை வழங்கினர். தனக்கு தங்க விசா வழங்கிய துபாய் அரசுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து பேசிய அவர், "எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும்,” என்று கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்...
ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு!

ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு! ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பல தடைகளை கடந்து நவம்பர் மாதம் 25-ந்தேதி தியேட்டரில் வெளியானது. அடுத்த சில நாட்களில் மாநாடு படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் சில தினங்களுக்கு முன்பு மாநாடு படத்தின் 25 வது நாளை படக்குழுவினர் கொண்டாடினார்கள். இந்நிலையில் மாநாடு படம் ஹிட் ஆனதையொட்டி நடிகர் சிம்பு தன் ரசிகர்களுடன் ஒரு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விழா ஜனவரி 6-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவு...
நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் – இயக்குனர் மறைவுக்கு கமல் இரங்கல்!

நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் – இயக்குனர் மறைவுக்கு கமல் இரங்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் - இயக்குனர் மறைவுக்கு கமல் இரங்கல்! கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் சேதுமாதவன். மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான இவர் சென்னையில் வசித்து வந்தார். 90 வயதான சேதுமாதவன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இயக்குனர் சேதுமாதவனுக்கு மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மலையாளத்தில் பல படங்களை இயக்கிய சேதுமாதவன் தமிழில் சிவகுமார்-ராதா நடித்த மறுபக்கம் படத்தை இயக்கினார். இப்படம் தேசிய அளவில் சிறந்த சினிமாவுக்கான விருதை பெற்றது. மலையாள சினிமாவில் நடிகர் கமல்ஹாசனை இவர்தான் அறிமுகம் செய்தார். 1962-ம் ஆண்டு கண்ணும் காராளும் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். இவரது மறைவ...
திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா’

திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா" சினிமா என்பது மிகப்பெரிய காட்சி ஊடகம் என்றாலும், அதனுடைய முதல் நோக்கம் மக்களை மகிழ்விப்பது தான். அதனை சரியாக புரிந்துக்கொண்ட படைப்பாளிகள், மக்களை மகிழ்விக்க என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்குமான கலகலப்பான காமெடி, திகில் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது ‘கஜானா’. போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிப்பதோடு ,படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார். ஜோதிகா நடித்த ’ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார். இயக்குநர் வேலுபிரபாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்தி...
கிறிஸ்மஸ் ட்ரீட் ஆக வெளியாகும் விஷாலின் வீரமே வாகை சூடும் டீசர்!

கிறிஸ்மஸ் ட்ரீட் ஆக வெளியாகும் விஷாலின் வீரமே வாகை சூடும் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கிறிஸ்துமஸ் தினத்தில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர் ! விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியாகிறது. மிக சமீபத்தில் தான் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்ப...
சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி!

சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி! நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் நல்ல படங்களை தயாரித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, “விருமன்” படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் ஆரம்பமானது. மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் 60 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கார்த்தி கூறும்போது, ‘மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாட்கள் படப்பிடிப்பை இயக்குனர் முத்தையாவும், ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் நடத்தி உள்ளார்கள். என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எதார்த்தமானவர், அவருடன் நடித்த நாள்கள் ...