வெள்ளை தாடி மீசைக்கு பை…பை… மீண்டும் இளமை தோற்றத்துக்கு திரும்பிய மாதவன்..!
சாக்லெட் பாய் மேடி அப்படின்னு இளசுகள் கூச்சல் போட்டதெல்லாம் ஒரு காலம்... என்னமோ போடா மாதவா இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்லப்பா... அப்படின்னு சொல்ற மாதிரி மேடி மாதவனா மாறி... அதுவும் வெள்ளை தாடி மீசை முடி எல்லாம் வெளுப்பா இருக்க ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு கேரக்டராவே மாறியிருந்தார்.
இப்படி கெட்டப் ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல 2 வருஷம் இதே கெட்டப்புல இருந்து அந்த விஞ்ஞானி படத்தை முடிச்சி குடுத்துட்டாரு.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்துல நம்பியாவே மாறியிருந்த மாதவன் தனது 2 வருஷ கெட்டப்பை கலைச்சி தாடி மீசை எல்லாம் எடுத்துட்டு பழையபடியே மேடியா மாறியிருக்கார்.
அவர் நடிச்சி முடிச்ச படம் பல திரைப்பட விழாக்களில் திரையிட்ட பிறகுதான் தியேட்டர்ல ரிலீஸ் ஆகுமாம்....
