தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு காரணம் விஷால் அல்ல – விஷ்ணு விஷால்
தமிழ் படங்களின் வெளியீடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு குழுவை அமைத்தது. படங்களின் வெளியீடு தேதிகளை அந்த குழு நிர்ணயம் செய்கிறது. அதன்படி, வருகிற 21-ந் தேதி, ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு,’ விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி,’ விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்பட சில படங்கள் வெளிவர உள்ளன
தொடர்ந்து தனுஷ் நடித்த ‘மாரி-2’ சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ உள்பட சில படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.இதனால் குறைந்த முதலீட்டு படங்களை தயாரித்த பட அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். குழப்பம் நிலவியது. அதைத்தொடர்ந்து 21-ந் தேதி, யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.
இதுபற்றி ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-“பிரச்சினைகள...
