சனிக்கிழமை, ஆகஸ்ட் 8
Shadow

Tag: அதிகார அத்துமீறல்

அதிகார அமைப்புகளின் அத்துமீறலை இனியும் அனுமதிக்க கூடாது – சூர்யா ஆவேசம்

அதிகார அமைப்புகளின் அத்துமீறலை இனியும் அனுமதிக்க கூடாது – சூர்யா ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "'அதிகார அத்துமீறல்‌' முடிவுக்கு வரவேண்டும்‌! 'மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது' என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன. சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ 'லாக்கப்‌ அத்துமீறல்‌' காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌. 'இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌' என்று கடந்து செல்ல முடியாது. போலீஸாரால்‌ கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்‌தை ஜெயராஜ்‌, மகன்‌ பென்னிக்ஸ்‌ இருவரையும்‌ அரசு மருத்துவர்‌ பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார்‌. நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட்‌, பாதிக்கப்பட்டவர்களின்‌ நிலையை பரிசோதிக்காமல்‌, 'இயந்திர கதியில்‌' சிறையில்‌ அடைக்க உத்தரவிட்டுள்ளார்‌. சிறையில்‌ நடத்தப்பட வேண்டிய சோதனைகளும்‌ முறையாக நடக்...