ஆயிரம் கிலோ குண்டு வீசப்பட்ட தீவிரவாதிகள் முகாம்… இந்திய விமானப்படை அதிகாலை அட்டாக்…!
ஆயிரம் கிலோ குண்டு வீசப்பட்ட தீவிரவாதிகள் முகாம்... இந்திய விமானப்படை அதிகாலை அட்டாக்...!
இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர்
இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியது. இந்நிலையில், இன்று அதிகாலை புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்திருக்கிறது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 12 மிராஜ் ரக போர் விமானங்களில் அதிகா...
