டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல் அதிர்ச்சியில் பாஜக
டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல்
டெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும் முனைப்போட்டி நிலவுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மும் முனைப்போட்டி ஏற்பட்டது. அப்போது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்தது.
பாரதிய ஜனதா கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த தடவை தேர்தலிலும் அதேபோன்று இமாலய வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் கெஜ...
