ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – நிர்மலா சீத்தாராமன்
தமிழர்களின் தொன்மையை உலகுக்கு விளக்கும் வகையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - நிர்மலா சீத்தாராமன்
பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியபோது கூறியது;
சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு முக்கியமான நகரங்கல் தேஜஸ் ரயில் மூலம் இணைக்கப்படும். சுற்றுலா துறையை மேம்படுத்த ரூ. 2500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகம், அரியானா, உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 5 மாநிலங்களில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்....
