என்னைக் கண்டு ஏன் ஓடி ஒளிகிறீர்கள் பாஜகவினருக்கு கேள்வி எழுப்பும் ஆனந்த் சீனிவாசன்!
பா.ஜ.க அரசின் தவறான திட்டங்களாலும், நிர்வாகக் குறைபாட்டாலும் இந்தியாவின் பொருளாதார நிலை மிகுந்த கவலைக்குரிய நிலையை அடைந்துள்ளது. பொருளாதார அறிஞர்கள் பலரும் பா.ஜ.க அரசின் நிர்வாக தோல்வியைச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், பாசிச போக்கைப் பின்பற்றி விமர்சனங்களை அடக்க நினைக்கின்றனர் பா.ஜ.க-வினர்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வாதங்களை எடுத்துரைக்கும் பொருளாதார நிபுணர்களை, விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என பா.ஜ.க-வினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
பா.ஜ.க-வினரின் இத்தகைய அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து, விவாதிக்க அச்சம் கொள்வது ஏன் என அவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், பொருளாதார நி...
