தலைமை செயலகத்தில் அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென ஆபாச வீடியோ ஓடியதால் பரபரப்பு..!
தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திடீரென ஆபாச வீடியோ ஓடியதால் பரபரப்பு..!
கர்நாடக சட்டசபையில் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே சில பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆபாச வீடியோ பார்த்து சர்ச்சை ஆன விவகாரம் நினைவிருக்கலாம்.
இப்போது அதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தில் உணவு மற்றும் பொது விநியோக துறை தொடர்பான அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது.
பொது வினியோக துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்த ஒரு பவர் பாயிண்ட் பிரண்டேஷன் திரையில் காண்பிக்கப்பட்டது.
அப்போது திடீரென அந்த திரையில் சில வினாடிகள் ஆபாச படம் ஓட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் அந்த கூட்டத்தில் பல பெண் அதிகாரிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆபாச படம் ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் அது நிறுத்தப்பட்டு கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது....
