தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாம்!
ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு சிக்கல்களை அ.தி.மு.க. சந்தித்து வருகிறது. முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
அன்றைய தினமே சபாநாயகர் ப.தனபாலை சந்தித்த அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், “அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு எதிராக 19 பேரின் செயல்பாடு உள்ளது” என்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
19 பேரில் ஜக்கையன் (கம்பம் தொகுதி) மட்டும் சபா...
