மாட்டை பூட்டி செக்கிழுக்கும் காஷ்மீர் முதியவர்!
எண்ணெய் வித்துகளில் இருந்து சமையல் எண்ணெய் எடுப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மரச்செக்கு பயன்படுத்தப்பட்டது. இதை இழுப்பதற்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டன.
தற்போது விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்தில் இந்த மரச்செக்கு பயன்பாடு வழக்கொழிந்து விட்டது. பெரும்பாலும் காட்சிப்பொருளாகவே மாறிவிட்ட மரச்செக்கு, ஆங்காங்கே ஓரிரு பகுதிகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
இதில் முக்கியமாக, காஷ்மீரை சேர்ந்த முகமது வானி (வயது 77) என்ற முதியவர் இன்றும் மரச்செக்கு மூலம் எண்ணெயை பிரித்தெடுத்து வருவது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த தள்ளாத வயதிலும் அதிகாலை முதல் அந்தி மாலை வரை செக்கில் மாட்டை ஓட்டி எண்ணெய் எடுத்து வரும் அவருக்கு என பல வாடிக்கையாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
காஷ்மீரில் கடந்த 1970-களில் மூலை முடுக்கெல்லாம் மரச்செக்கு பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்...
