புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: இல.கணேசன்

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து!

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து! தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்தார். மணிப்பூர் கவர்னராக 24.7.2019-ல் நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி முதல் அவர் விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் மணிப்பூர் மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் இல.கணேசன்  மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இல.கணேசன்  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது அண்ணனின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வருகிறார். இளம் வயதிலேயே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார்...