வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

Tag: இளையராஜா வழக்கு

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ரூ.50 லட்சம் இழப்பீடு தரக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ரூ.50 லட்சம் இழப்பீடு தரக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தம்மை வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி  இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.  அவரை சமீபத்தில் பிரசாத்  ஸ்டூடியோ நிர்வாகம் அங்கிருந்து வெளியேற்றி உள்ளது.   மேலும் ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை அவர் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.   இது குறித்து இளையராஜா சென்ன உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்    சுமார் 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் இசையமைத்து வந்த தன்னை வெறியேற்றிவிட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். தமக்கு இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, ஸ்டூடிய...