ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலகம் முழுதும் பரவி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ வாகனங்கள், அத்தியாவசியப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில் சேவைகள், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும் செவ்வாய் கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்த்தலாமா? ...
