Tag: ஓபிஎஸ்
கட்சி அனுமதி இன்றி யாரும் கருத்து சொல்ல கூடாது – அதிமுகவினருக்கு தடை போட்ட இபிஎஸ்- ஓபிஎஸ்
தனிப்பட்ட முறையில் யாரும் கருத்து சொல்லக் கூடாது என அதிமுகவினருக்கு இபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து அறிக்கை
அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…
ஊடக விவாதங்களில் கழக அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் செல்லுங்கள் என்று, ஓ.பி.எஸ். இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் சிலர் பேசிய பேச்சுகள் ஊடகங்களில் சர்ச்சை ஆன நிலையில், ஓபிஎஸ் சார்ந்த தேனி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்...
தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி த...

