கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை!
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை!
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசு மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து தலைமை செயலாளர் ரவிக்குமார் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
1. கர்நாடகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்பு மற்றும் வித்யாகம வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் 10 முதல் பி.யூ.கல்லூாி வரை நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். ஆனால் இதில் மாணவர்களின் வருகை கட்டாயமல்ல.
2. கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் வகுப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் தேர்வு நடைபெறும் பல்கலைக்கழகம், மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்...
