திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: கள்ளக்குறிச்சி

மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்- பெற்றோருக்கு ஐகோர்ட் உத்தரவு!

மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்- பெற்றோருக்கு ஐகோர்ட் உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனையின்போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது. அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார் . அப்போது மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகள், மற்றும் பிர...
7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்!

7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்! கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னகுப்பம், வண்டிப்பாளையம், சேந்தமங்கலம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.5 என்ற விலையில் சுமார் 7 டன் வெண்டைக்காயை அப்பகுதியை சேர்ந்த வியாபாரியான இளங்கோ மற்றும் அவரது குழுவை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் திடீரென வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால், இவர்களிடம் இருந்து வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்யவில்லை. இதனால் வெண்டைக்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வந்தனர். இதனிடையே குடானில் தேக்கமடைந்த வெண்டைக்காய் யாருக்கும் பயனின்றி வீணாகி ...