8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ – காதலி ஆத்திரம்
8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ - காதலி ஆத்திரம்
சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் திரிபுராவில் நடந்தது. அங்குள்ள கோவாய் நகரம் அருகே உள்ளது பெல்சேரா கிராமம். இங்கு வசிக்கும் சவுமென் சந்தல் (வயது 30) என்பவர் ஆசிட்’காயங்களுடன் அகர்தலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ‘ஆசிட்’ தாக்குதலில் காயம் அடைந்து மூக்கு, கண் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இதுபற்றி அவரது சகோதரர், அண்ணனின் காதலி பினட்டா சந்தல்(27) ‘ஆசிட்’ வீசியதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் பினட்டாவை பிடித்து விசாரித்தபோது பினட்டா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தோம். கடந்த 2 வருடங்களாக சவுமென் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார். என்னை திருமணம் செய்யவும் சம்மதிக்கவில்லை.
...
