புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: குடிநீர் தொட்டி

மனைவியுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி குடிநீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்!

மனைவியுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி குடிநீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (வயது 29).இவரது மனைவி யுவராணி. இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். யுவராணி சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்,ஒரு மகன் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் யுவராணி கணவரை பிரிந்து குன்னத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மதன் யுவராணி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து யுவராணி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மதன் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார். போலீசார் இது தொடர்பாக மதனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் ...