கொரானாவை ஒழிக்கும் அப்பளம்னு அறிமுகப்படுத்திய பாஜக மத்திய அமைச்சரின் முட்டாள்தனம்!
கொரானாவை ஒழிக்கும் அப்பளம்னு அறிமுகப்படுத்திய பாஜக மத்திய அமைச்சரின் முட்டாள்தனம்!
‘பாபிஜி அப்பளம்’ என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்திய பா.ஜ.க மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த அப்பளம் கொரானா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் எனத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரானா குறித்து எந்தவொரு தவறான தகவல்களையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், அரசின் அறிவுறுத்தலை பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரகத் தொழில்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பின்பற்றாமல் தவறான தகவலை மக்கள் மத்தியில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'பாபிஜி அப்பளம்' ...
