கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியுமாம் சொல்கிறார் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி!
கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியுமாம் சொல்கிறார் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி!
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரானா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரானாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரானா பரவியது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது.
தினமும் கொரானா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. வசதி இருப்பவர்கள் தான் தனியார் மருத்துவமனையை...
