நாடு முழுவதும் இன்று முதல் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வைரசும் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி டோஸ் அளவு 151.57 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டமாக 2022 ஜனவரி 10 முதல் சுகாதாரப் பாதுகாப்பு, முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கும் என்று டிசம்பர் 25ந்தேதி அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று கொரோனா பூஸ்டர் டோஸ், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணிப் பணியாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை தொடங்குகிறது.
கூட்டு நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் பூஸ்டர் டோஸ் பெறுவதற்காக மருத்துவரின் சான்றிதழ் அல்லது மருந்துச் சீட்டைச் சமர்ப...
