‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாயை கொலை செய்த சிறுமி!
‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாயை கொலை செய்த சிறுமி!
நவிமும்பை ஐரோலி செக்டார்- 7 பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உண்டு. மகளை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். அந்த தம்பதியின் மகளுக்கு 15 வயதே ஆன நிலையில், அவளை நீட் தேர்வுக்கு படிப்பதற்காக பயிற்சி மையத்தில் பதிவு செய்தனர்.
ஆனால் டாக்டருக்கு படிக்க தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்று அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்து வந்தாள். இதை ஏற்காத பெற்றோர் நீட் தேர்வுக்காக பயிற்சி பெறும்படி சிறுமியை கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அந்த சிறுமி செல்போனில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதை அவளது தந்தை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இதையடுத்து அங்கு சென்ற தாய், வீட்டுக்க...
