திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: கோமகன்

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பிரபலம் கோமகன் கொரோனாவுக்கு பலி!

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பிரபலம் கோமகன் கொரோனாவுக்கு பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பிரபலம் கோமகன் கொரோனாவுக்கு பலி! சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் நடிகை சினேகாவுடன் நடித்தவர் மாற்றுத்திறனாளியான கோமகன். இவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். பார்வையற்றவரான கோமகன் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில், ‘மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்’ என்ற வரியை உணர்ச்சிப்பூர்வமாக பாடி இருப்பார். இந்தப் பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தது. இதனால் கோமகன் பிரபலம் அடைந்தார். அவர் இசை பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். 2019-ம் ஆண்டு தமிழக அரசின் விருதினை பெற்றார். இந்நிலையில், கோமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஐ.சி.எப்.பில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்...