கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் சில்லரை கடைகள் திறப்பு!
கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் சில்லரை கடைகள் திறப்பு!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 1800 சிறு மொத்த விற்பனை கடைகள் உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்க்கெட்டில் கடந்த 10-ந் தேதி முதல் சிறு மொத்த விற்பனை கடைகள் செயல்பட அனுமதி கிடையாது என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒட்டு மொத்தமாக கடைகள் மூடப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று சிறு மொத்த வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த 9-ந்தேதி அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பில் வியாபாரிகளுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் சுழற்சி முறையில் 50 சதவீதம் சில்...
