இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..!
இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி படம் 2007 ஆம் ஆண்டு இந்தியில் பூல் பூலையா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டநிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
ரஜினி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானப் படம் சந்திரமுகி.
முந்தைய பாபா படத்தின் படு தோல்விக்கு பின் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார்.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மலையாளத்தில் மணிச்சித்திரதாழ் என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதைத்தான் சந்திரமுகி கதையாக சொன்னார் இயக்குனர் வாசு.
வெற்றி பெற்ற படம் மீண்டும் தமிழில் வந்து ரஜினியின் வெற்றிப் பட வரிசையில் சேர்ந்து கொண்டது.
தமிழில் வெற்றி பெற்ற இந்த படத்தை இந்தியில் 2007 ஆம் ஆண்டு இந்தி ரீமேக் செய்தார் இயக்குனர் பிரியதர்ஷன்.
இந்தி...
