14ம் தேதிமுதல் 19ம் தேதி வரை சபரிமலை நடை திறப்பு பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு!
கேரள முதல்வர் பினராயி விஜயன் வரும் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி பக்தர்கள் தரிசனத்துக்காக மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை வருகிற 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஐயப்பன் கோவிலுக்கான புதிய நடைமுறைகள் குறித்து தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

