இம்ப்ரோ சித்த மருந்து ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு
இம்ப்ரோ மருந்துக்கு கொரானாவை தடுக்கும் திறன் உள்ளதா?
ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு
கொரானாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இதற்காக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மருந்தை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அண்மையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதா...
