ஒரே படம்… 6 கதை… 6 ஹீரோ… 6 ஹீரோயின்… 6 இசையமைப்பாளர்கள் புதுசாய் களம் இறங்கும் சிம்புதேவன்..!
இயக்குனர் சிம்புதேவன். இவர் இயக்கிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி" படம் பெரிய வெற்றி பெற்றது.
காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவை ஹீரோ லெவலில் உயர்த்தியதும் இவர்தான்.
இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகம் எடுக்க அறிவிப்பு வெளியானது. மீண்டும் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏனோ படப்பிடிப்பு தொடங்காமலேயே படம் நிற்கிறது.
இந்த நிலையில் சிம்புதேவன் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.
சிம்புதேவனின் புதிய படத்தில் ஆறு கதைகள் உள்ளதாம்.
ஆறு கதையும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் ஆறு ஹீரோக்கள், ஆறு காமிராமேன்கள், ஆறு எடிட்டர்கள், ஆறு ஹீரோயின், ஆறு இசையமைப்பாளர்கள் என புதுமையாக உருவாக்கப்படவுள்ளது.
இதில் நான்கு ஹீரோக்களாக ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நடிக்கவிருப்பதாகவும் இன்னும் இரண்டு ஹீரோக்...
