மதுக்கடைகளை திறந்த பாஜக அரசை எதிர்க்கும் சிவசேனா!
மதுக்கடைகளை திறந்த பாஜக அரசை எதிர்க்கும் சிவசேனா!
கொரானா தொற்றால் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா,மராட்டியம், கர்நாடகா, டெல்லி, அசாம் உள்பட பல மாநிலங்களில் மதுக் கடைகள் கடத்த சில நாட்களாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே குடிகாரர்கள் கொளுத்தும் வெயிலிலும் வரிசையில் காத்து நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், அடித்து பிடித்துக் கொண்டு மக்கள் மதுவை வாங்கிச் செல்கின்றனர். இதனால் கொரானா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்து வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக கொரானாவை விடவும் அதிகம் பேசப்படும் விஷயமாகியிருப்பது மது...
