ஜோதிகாவின் புதுப்படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய திட்டம்!
ஜோதிகாவின் புதுப்படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய திட்டம்!
கொரானா காரணமாக மூடப்பட்டு இருக்கும் தியேட்டர்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் இருக்கிறது.
அதோடு, இந்த கொரானா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் சிக்கலில் மாட்டிக் கொண்ட படங்களின் நிலை பெரும் சிரமத்தில் உள்ளது.
இந்த சூழலில் நாடு முழுதும் டிஜிட்டல் மூலமாக நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதனால் தியேட்டர்கள் ரிலீசுக்கு காத்திருக்காமல் நேரடியாக டிஜிட்டலில் படங்களை ரிலீஸ் செய்ய பல தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளதாக நம்பப்படுகிறது.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் ...
