சாமி கும்பிடப் போனதால் சிறுவன் சுட்டுக் கொலை உ.பி.யில் கொரானாவை மீறி பரவி கிடக்கும் ஜாதிவெறி வைரஸ்!
சிவன் கோயிலுக்கு சாமி கும்பிடப் போனதால் சிறுவன் சுட்டுக் கொலை உ.பி.யில் கொரானாவை மீறி பரவி கிடக்கும் ஜாதிவெறி வைரஸ்!
உத்தரபிரதேசத்தில் கோயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்ததற்காக பட்டியலின பிரிவை சேர்ந்த சிறுவன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தொம்கேரா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவரது மகன் விகாஷ் குமார் ஜாதவ் (17).
கடந்த 1ம் தேதி சிவன் கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட முயன்றுள்ளார், அப்போது அங்கிருந்த மற்ற சமூகத்தினர் விகாஷை தடுத்துள்ளனர்
அதையும் மீறி விகாஷ் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளார்.
இதைப்பார்த்த மற்றவர்கள் விகாஷை தாக்கியுள்ளனர்.
இதுபற்றி விகாஷின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு விகாஷின் வீட்டுக்குள் புகுந்...
