விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா… எதற்காக…
படம் தொடங்காமல் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா.
விஜய் நடிப்பில் தான் இயக்க இருக்கும் படம் தள்ளிப்போவது ஏன் என இயக்குனர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் இப்போது ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தளபதி 63 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
விஜய் 63 படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் அடுத்தப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் தான் இயக்குவதாக பேசப்பட்ட விஜய் படம் தொடங்காமல் தாமதமாவது ஏன் என இயக்குனர் மோகன் ராஜா விளக்கமளித்துள்ளார்.
அதில் ‘விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத...
