கோர்ட் உத்தரவுக்கு பின் முதல்முறையாக போயஸ் கார்டன் போன தீபக்…
கோர்ட் உத்தரவுக்கு பின் முதல்முறையாக போயஸ் கார்டன் போன தீபக்...
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அவருடைய மறைவுக்கு பிறகு, இந்த இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து சென்னை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் இந்த வீடு கொண்டு வரப்பட்டு வருவாய் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வீட்டுக்கான சட்டபூர்வமான முதல் நிலை வாரிசாக தீபா மற்றும் தீபக் என்று அறிவித்தது. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தீபக், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு வந்தார். அங்கு காவல் பணியில் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் இருந்தார். அவரிடம் தீபக், ‘...
