ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி?
ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி?
தமிழ்நாட்டில் நேற்று முதல் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
வருகிற (25-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. என்றாலும் தினசரி பூஜை கோவில்களில் நடைபெறும்.
இந்த பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்த திருமணங்களையும் நிறுத்தவேண்டியது இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்துசமய அறநிலையத்த...
