யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..!
யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..!
ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘அயோக்யா’ படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன டெம்பர் படத்தின் ரீமேக்தான் இந்த அயோக்யா படம். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து முடிந்து ரிலீசுக்கு ரெடியானது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பும் வெளியான நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இப்போது வரும் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரிலீசுக்கு இரண்டு தினங்கள் மட்டு...
