கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் – முதல்வர் முடிவு
கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் - முதல்வர் முடிவு
கொரானாவை தடுக்க ,5ம் கட்ட ஊரடங்கு போடப்பட்ட ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
டெல்லியில் இப்போது வரை அனுமதிக்கப்பட்ட வற்றைத் தவிர, முடிதிருத்தும் கடைகள், சலூன்கள் மற்றும் அனைத்து கடைகளையும் திறக்கலாம். ஆனால் அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எல்லைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ப...
