தடுப்பூசி பெயரில் 1.25 லட்சம் கோடி கொள்ளை – திடுக் புகார்
கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிப்பதா?
மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
இது தொடர்பாக அக்கட்சியின் தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்…..
இந்தியாவில் இதுவரை எல்லாவிதமான தடுப்பூசி திட்டங்களும், அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது என்பதே வரலாறு.
ஆனால் தற்போது கொரானாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிக்குக் கட்டணம் செலுத்தித் தான் பயனாளிகள் செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, இந்திய மக்களின் உயிரோடு விளையாடுகிற கொடுமையான காரியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்தவமனைகளில் குறைந்த விலையிலும் கொரோனா தடுப்புசி செலுத்தி வரப்பட்டது.
மத்திய அரசு 18 வயது முதல...
