சென்னையில் இன்று தொடங்கிய தபால் வாக்குப்பதிவு!
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இந்த புதிய நடைமுறை மூலம் வயதானவர்கள் தங்கள் வாக்கினை வீடுகளில் இருந்தே பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.
சென்னை மாவட்டத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு விருப்பம் உள்ள முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. 12 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட விண்ணப்பித்து இருந்தனர். அதனை ஆய்வு செய்தததில் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 7,300 பேர் மட்டுமே தபால் ஓட்டு போடுவதற்கு இறுதி செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற ...
