4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகள் பிரதமர் மோடி சாதனை – மத்திய அமைச்சர் பெருமிதம்
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகளை கட்டியுள்ளார். அது மட்டுமின்றி 2022-க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க முடிவு செய்துள்ளார்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் பலனாகத் தான் அவருக்கு விருது கிடைத்துள்ளது. அதனை இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் அவர் அர்ப்பணித்துள்ளார்.
மோடி அரசு ஏற்படுத்தப்பட்டவுடன் உடனடியாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளது. விவசாய நிலத்தில் ஏற்படும் பாதிப்புகள், விவசாய பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், விளைந்த பின்னர் ஏற்படும் பாதிப்...
