அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்று வேலை! அரசுக்கு திருமா கடும் கண்டனம்
அரசு ஊழியர்களிடம் பறித்த உரிமைகளை திருப்பித் தருக!
ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்றுவேலை!
தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்
கொரோனா பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகத் தமிழக அரசு பறித்துக்கொண்டிருக்கிறது. அகவிலைப்படி பறிப்பு, ஈட்டிய விடுப்பைப் பணமாக்கிக் கொள்வதற்குத் தடை என அரசு ஊழியர்கள்மீது அடுத்தடுத்து தமிழக அரசு தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது ஓய்வுபெறும் வயதை 59 என ஆக்கிக் கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது. மாறாக, பறிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளை மீள ஒப்படைக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். ஓய்வு காலப் பலன்களை வழங்காமல் ஒத்திப் போடுவதற்காகவே இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அரசு ஊழியர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை ஓ...
